சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (13): திரு. ஆதவன் ஆ. மற்றும் திருமதி. தவமணி கோவிந்தராஜன் அவர்களின் இறை அனுபவங்கள்.
![]() |
ஆதவன். ஆ (Adhavan) |
நேர்காணல் விவரம்:
நாள்: வைகாசி 12, 2018 சனிக்கிழமை [05/27/2018] மதியம்
இணைப்பு: நேர்காணல் ஒலி நாடா [Audio of the interview]
குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:
- புது தில்லியில் இருந்து அஜ்மீர் தர்கா நோக்கி திரு. ஆதவன் அவர்களும் சித்தர் அய்யா பிள்ளையும் பேருந்து நெரிசலில், படிக்கட்டில் அமர்ந்தவாறு பயணிக்கின்றனர். அவருக்கு அந்த தனிமை அச்சம் தர, அதனை சித்தரிடம் தெரிவித்திருக்கின்றார். சித்தரும் நீ ஏன் தனியாக இருப்பதாய் நினைக்கின்றாய், எதிரில் பார் என்று கட்டளையிட, திரு. ஆதவன் அவர்களுக்கு ஒரு ஒளி ‘பளிச்’ என்று தென்படுகின்றது. மேலும், நாம் இருவரும் இன்று இரவு தூங்க போவதில்லை, மாறாக அந்த ஒளியை பார்த்தவாறே பயணிக்க போகின்றோம் என்று சொல்ல, திரு. ஆதவன் அவர்களும் அந்த ஒளியை பார்த்தவாறே பயணிக்கின்றார். அதனை பார்க்கும் போது மனதில் வேறு எந்த எண்ணமும் எழவில்லை என்றும், நடத்துனர் வந்து “ஆஜ்மீர் தர்கா” என்று சொல்லிய போது அந்த ஒளி மறைந்து விடுவதையும் நினைவு கூறுகின்றார். இந்த நிகழ்வு நடக்கும் போது அவருக்கு பதிமூன்று பதினான்கு வயது இருக்கும், மேலும் இவர் திரு. கோவிந்தராஜன்* அவர்களின் மூத்த மகன் வழி பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் சபரி மலை பயணத்தின் போது மிகவும் சிறிய வயது, பாலிய பருவம் முடியாத தருணம், சிறிய பாதை வழியாக செல்கின்றோம். அந்த பயணத்தில் நானும் உடன் செல்கின்றேன். இடையே இடையே களைப்பு தாளாமல், நடக்க முடியாமல் தவித்திருக்கின்றார். தேநீர் வாங்கி தருகின்றனர். அதற்கு பின்னரும் அவரால் மலை ஏற முடியவில்லை. பின்னர் சித்தர் அவனை விடு அவன் நடப்பான் என்று சொல்ல அவருக்குள் புது பலம் வந்ததது போல் உணர்கின்றார். அதன் பின் களைப்பின்றி, சோர்வடையாமல் மலை ஏறுகின்றார். சித்தர் கைப்பிடித்து பதினெட்டு படு ஏறுகின்றார். சித்தர் நீ ஏறிவிடுவாய் என்று சொல்ல அவரும் ஏறுகின்றார். யாரும் அவரை பிடிக்கவில்லை, இருந்தும் யாரோ கையைப் பிடித்து தூக்கி விட்டதை போல உணர்கின்றார்.
- காரைக்குடியா, இல்லை திருச்சியா என்று அவருக்கு நினைவில்லை, ஒருவர் சித்தரின் பர்ஸை திருடி விடுகின்றார், வேறு ஒருவர் சித்தரிடம் வந்து சாமி உங்கள் பர்ஸ் இருக்கின்றதா என்று கேட்க, சித்தர் எனக்கு தெரியும், அவனே வந்து தருவான் என்று சொல்லுகின்றார். அதேபோல் பர்ஸை திருடிய நபரும் வந்து தர, சித்தர் ஒரு அடி அடித்து விடுகின்றார், எடுத்த நபரும், சாமி மன்னிச்சுகங்க சாமி யாருனு தெரியாம பர்ஸை எடுத்து விட்டேன் என்று சொல்லிவிட்டு ஓடி விடுகின்றார்.
- ஒரு முறை தாள விருச்சக்கத்தில் அனைவருக்கும் புஷ்பம் தந்து அமரவைக்கின்றார். ஒவ்வொருவரையும் வினவுகின்றார், திரு. ஆதவன் அவர்களுக்கு புஷ்பம் தன்னை கட்டுவதை போல ஒரு உணர்வு ஏற்பட்டிருக்கின்றது, அதற்கு பின், அங்கு பேசுவதும் எதுவும் கேட்கவில்லை, ஒரு வித ஆழ்ந்த தியானத்திற்கு சென்று விடுகின்றார்.
- பலருக்கு சித்தர் செய்தி சொல்லுவதையும், ஒரு சிலர் மலேசியாவில் இருந்து வந்து செய்திக் கேட்டு விட்டு போனார்கள் என்பதையும் நினைவு கூறுகின்றார். மேலும் சித்தர் தனது இளம் பருவத்தில் திருமணத்திற்கு முன்னும் பின்னும் மிகவும் கஷ்டப்பட்டு, வறுமையில், சுற்றத்தாரிடம் யாசகம் செய்து வாழ்ந்து வந்தார் என்பதையும் நினைவு கூறுகின்றார்.
- ஒருமுறை வெளியூர் மலை பயணத்தில், தனது பன்னிரெண்டு பதிமூன்றாம் வயதில், இறை நிலையால் ஆட்கொள்ளப்பட்டு தன்னை தலைகீழாக தூக்கி ஒரு பேப்பர் தாளை முன்னும் பின்னும் ஆட்டுவது போல சித்தர் ஆட்டி இருக்கின்றார், அத்தருணம் திரு. ஆதவன் அவர்கள் இரு கையை கூப்பி அச்சம் ஏதுமின்றி அதன் அசைவை அனுபவித்திருக்கின்றார்.
- அது சுரளி மலை பயணம், திரு. ஆதவன் அவர்களின் பாலிய பருவத்தில் நடந்த ஒரு நிகழ்வு. அவருக்கு அது ஞாபகம் இல்லையெனினும், அந்த பயணத்தில் அவருடன் இருந்த நான் (ரோஸாரியோ ஜோசப்), சாட்சியாக அந்த நிகழ்வை இங்கு பதிவை செய்து கொள்கின்றேன். சுரளியப்பர் சன்னிதிக்கு மேல் உள்ள குகையில் வழிபாடு முடிந்த பின், எதிரில் ஒரு சிறிய குகையிலும் வழிபாடு செய்தோம், அங்கு, சென்று வழிபாடு ஆரம்பித்த சில நொடிகளிலேயே திரு. ஆதவன் ஆசனமிட்டு அமர்ந்திருவர் பின்னோக்கி விழுந்து விடுகின்றார். கண்களும் சொருகி விடுகின்றது, ஆனால் கால்கள் மடித்தவாறு அப்படியே இருக்கின்றது. வழிபாடு முடிந்த பின்னும் அதே நிலையில் இருக்கின்றார். அவரை எழுப்ப முயன்றோம், என்ன கூப்பிட்டும் எழவில்லை, தட்டியும் பார்த்தோம் எழவில்லை, மிகவும் சிரமப்பட்டு, எப்படியோ ஒரு வழியாக சித்தர், மிகவும் போராடி, அவரின் ஆழ் நிலை தியானத்தை (சித்தகத்தை) களைத்து விடுவித்து எழுப்புகின்றார். அந்த சிறு வயதில் அத்தகைய கிடைப்பதற்கு அரிய முதிர் நிலை என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது!
- மேலும் ஊர்வலத்தின் போது அருள் நிலையில் ஆடுவார் என்பதையும் இங்கு பதிவு செய்து கொள்கின்றேன். அதே, சித்தர் சொல்லிற்கு இணங்க, பிறர் அருள் நிலையில் ஆடுவதற்கும், யோக நிலைக்கு தள்ளப்படுவதிற்கும், சாட்சியாக விளங்குகின்றார். திரு. இராமர் அவர்கள் வசிப்பிடத்தில், சித்தர் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்க, அதற்கு ஏற்றாற் போல, ஒவ்வொருவரும் அருள் நிலையில் சித்தரிடம் வருவதை கண்டு அதிசயித்துள்ளார்.
- சபரிமலை பயணத்தில் இவரது கழுத்தில் மாட்டியிருந்த, பர்மாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மாலையும், துளசி மாலையும், பிரிக்க முடியாதவாறு, பின்னிப்பிணைந்து கிடந்தன. அந்த மாலையை சித்தர் தமது பேழையில் வைத்திருந்தார் என்பதும், அதனை அவரது உடலை அடக்கம் செய்யும் போது சேர்த்து அடக்கம் செய்து விட்டதையும் இங்கு பதிவு செய்து கொள்கின்றேன்.
மேலுள்ள படத்தில் பேழை எனது கையிலும், மாலை திரு. மகாபலிபுரம் ரவி அவர்களின் கையிலும் இருப்பதை காணலாம். இந்த புகைப்படம் சித்தர்கள் அவர்களை 08/21/2011 அன்று அடக்கம் செய்யப்பட்ட போது எடுக்கப்பட்டது! - திருமதி. தவமணி கோவிந்தராஜனின்* பதிவுகள் பின்வருமாறு:
- திருமதி. தவமணி கோவிந்தராஜன் அவர்களின் அக்கா, ருக்மணி புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால், அவர்களின் வாழ்நாளை அதகரிக்கும் எண்ணத்துடன், தங்கையான தவமணியை திருமணம் செய்து கொள்கின்றார். அதேபோல் திருமதி. ருக்மணி கோவிந்தராஜன் அவர்கள், தனது ஆயுள் நீடிக்கப்பட்டு இருபது வருடங்கள் வாழ்கின்றார்.
- 1986ஆம் ஆண்டு, அருள்மிகு மகிஷாசுரமர்த்தினி ஆலயத்தின் முதல் கும்பாபிஷேகத்தின் போது கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் உயரற்று கிடந்திருக்கின்றார். அனைவரும் இறந்து விட்டதாக எண்ணி உடலை கிடத்திவிடுகின்றனர். பின்னர் உயிர் வந்து, கோயில் கலசத்தின் மேல் கால் வைத்து கும்பாபிஷேகம் நடத்துகின்றார்.
- கோமியத்தில் விளக்கு எரிந்ததை நினைவு கூறுகின்றார்கள்.
- ஆவி விரட்டுதல், செய்தி கூறுதல், இப்படி பல நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்திருக்கின்றார். செத்து விட்டதாக கிடப்பில் இருந்தவர்கள் மேலிருந்த ஆவியையும் ஒரு முறை விரட்டி இருக்கின்றார்.
- மருத்துவர் கை விரித்த நிலையில், இறந்து விடுவான் என்று நாலு பேர் தூக்கி வந்து போட்ட ஒருவர் மேல் இருந்த ஆவியை விரட்டி, அன்றே சாப்பிட வைத்திருக்கின்றார். சாப்பிட முடியாமல் இருந்த அவரும், அங்கே, அவர் இல்லத்தில் உணவு அருந்திருக்கின்றார். பின்னர் நடக்க முடியாமல் வந்த அவர் எழுந்து, நடந்து சென்று, காரில் ஏறி கிளம்பி இருக்கின்றார்.
- அதேபோல் அவர் தூரத்தில் தேவூர் வரும்போதே இங்கு ஆவி பிடித்த ஒரு பெண், அவன் என்னை விரட்ட வருகின்றான் என்று கூறி, ஆற்றில் போய் விழுந்து விடுகின்றாள். சித்தர் வந்து அவர்களை குணப்படுத்தி, சாப்பிடாமல் இருந்த அவர்களை சாப்பிட வைத்து அனுப்பி வைக்கின்றார்.
- ஒரு காலத்தில், அவர்களது ஊரில், தாள விருச்சம் என்ற ஒரு தாவிரம் மட்டும் சுமார் நான்கு ஆறு அடி தரையளவு மட்டுமே வளர்ந்திருந்தது! திருமதி. தவமணி கோவிந்தராஜனின் தாய் தகப்பன் காலத்திற்கு முன்னிருந்து, அது வளராமல் அதே நிலையில் அப்படியே இருந்திருக்கின்றது. சித்தர் அய்யா பிள்ளை வந்த பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடம் வழிபாடு செய்ததற்கு பின், 25–30 அடி வளர்ச்சி அடைந்து பெரும் மரமாக இன்று காட்சியளிக்கின்றது.
குறிப்பு: நேர்காணல் செய்து தொகுத்து வழங்குபவர் ரோஸாரியோ ஜோஸப் (ரோஸ்). இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக என்னை தொடர்புக் கொள்ளவும். மேலும் இந்த நேர்காணலுக்கான ஒலி நாடா என்னிடம் தான் உள்ளது. கேட்க விரும்புவோர் என்னை நேரில் சந்திக்கும் போது, தக்க காரணம் சொல்லி, கேட்டு பயன் பெறலாம். நன்றி.
No comments:
Post a Comment