சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (6): திரு. முருளி. ர அவர்களின் இறை அனுபவங்கள்.
![]() |
முரளி ர [Murali R] |
நேர்காணல் விவரம்:
இடம்: பெத்தேல் நகர், ஈஞ்சம்பாக்கம், சென்னை.
நாட்கள்:
1. பங்குனி 13, 2017 ஞாயிற்றுக்கிழமை [03/26/2017 ] மாலை 2.56 முதல் 3:10 வரை [2:56 PM to 3:10 PM]
இணைப்பு: நேர்காணல் ஒலி நாடா [Audio of the interview]
குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:
குறிப்பு: நேர்காணல் பதிவு செய்து தொகுத்து வழங்குபவர் ரோஸாரியோ ஜோஸப் (ரோஸ்). இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக என்னை தொடர்புக் கொள்ளவும். மேலும் இந்த நேர்காணலுக்கான ஒலி நாடா என்னிடம் தான் உள்ளது. கேட்க விரும்புவோர் என்னை நேரில் சந்திக்கும் போது, தக்க காரணம் சொல்லி, கேட்டு பயன் பெறலாம். நன்றி.
குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:
- சித்தர் அய்யா பிள்ளை இறை பாடல்கள் (சிவபுராணம், சிவவாக்கியர் பாடல்கள்,) பாடும் போது எல்லாம், ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியும், அவருடனான ஆத்மார்த்தமான பிணைப்பையும், பந்தத்தையும், உணர்கின்றார். எந்நிலையில் இருந்தாலும், அவர் பாடும் போது சந்தோஷம் கிட்டுகின்றது. இதனால் வெகுவாய் அவர் பால் ஈர்க்கப்படுகின்றார். சித்தர்கள் பாடும் போது, குரல், ராகம், தாளம் தாண்டி, அவர்களின் ஆன்மா அனைவரின் மனதையும் வசியப்படுத்துகின்றது. இவ்வாறு இரண்டற கலந்தவர்களுக்கு, அவரவர் நிலைக்கேற்ப, சித்தர் அவர்களின் ஆனந்த, யோக, ஞான நிலைகள் வெகு இயல்பாக கிடைக்கப் பெறுகின்றது.
- இப்படி ஒரு முறை, சித்தர் அய்யா பிள்ளை, அம்மனூரில், அவரது இல்லத்தில் பாடிக் கொண்டிருந்த போது, திரு முரளி, அவர்கள், அதனால் வெகுவாய் ஆட்கொள்ளப்பட்டு, பத்மாசனத்தில் மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் மெய்மறந்து அமர்ந்து விடுகின்றார். அவரது உயிர் எங்கோ அவரை அழைத்து செல்ல, ஒரு சில காட்சிகள் அவருக்கு கிட்டுகின்றது. அதில் அவர் மனதில் நன்கு பதிந்த காட்சி, ஓர் பெண் அமர்ந்திருந்ததும், ஓர் ஆண், தடி வைத்துக் கொண்டு அந்த பெண் முன் நின்று இருந்ததும். இவ்வாறு இந்தக் காட்சிகளை பார்த்தவாறு, அதே நிலையில், சிறு வயதிலேயே (10–12 வயது?) மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்துவிடுகின்றார். அந்த சிறு வயதிலேயே, கிடைப்பதற்கு அரிய ஆத்ம சுகங்களை, அனுபவிக்கவும் தொடங்கி விடுகின்றார்.
- சித்தர் தொடும் போது, உள்ளுக்குள் ஏதோ ஒன்று மேல் எழும்பி செல்வதை உணர்ந்திருக்கின்றார். அந்த நிலையில் சித்தர் மேல் கட்டுக்கடங்காத ஈர்ப்பு உண்டாகி, அவருடன் கட்டிப் புரண்டு, பின்னிப் பிணைந்து இருந்திருக்கின்றார். இந்த நிலையை, பல முறை, யாக வீதி உலா, மற்றும் பால் குடத்தின் போதும் அனுபவிக்கின்றார். இப்படி, அவருடன் இருந்த காலங்கள் அனைத்தும் மகிழ்வுற்று இருந்திருக்கின்றார்.
- ஹோம வீதி உலா, பால் குடம் போதும், தன் மேல் ஒரு சக்தி வந்து இறங்க, பல முறை, மெய் மறந்த நிலையில் ஆடியும் இருக்கின்றார்.
- சித்தர் தீண்டும் போதும், ஒரு வித மின்சாரம் தன் மேல் பாய்வதையும் உணர்ந்திருக்கின்றார்.
- ஒரு சபரிமலை பயணத்தின் போது, மதுரை பக்கம், அன்பர் ஒருவர் வீட்டில், அமர்ந்து, இரவு உணவு உண்ணும் நேரத்தில், எதிரே வாசி மலையில், இரு ஒளி திவளைகள் பளிச்சென்று தோன்றி மறைகின்றது. அதைப்பற்றி சித்தரிடம் வினவ, அந்த மலையில் வாசிமலையான் எனும் சக்தி இருப்பதை குறிப்பிடுகின்றார்.
- சிதம்பர நீராடலில், பிரம்மச்சாரி பாத பூஜையின் போது, முன் சொன்ன அதே ஆத்ம சந்தோஷம் கிட்டுகின்றது. உயிர் மேல் எழும்புவதையும் உணர்கின்றார்.
- பொதுவாக, சித்தர் ஸ்பரிசத்தின் போது எல்லாம், திரு. முரளி அவர்கள், தம் உயிர், மேல் நோக்கி செல்வதையும், கீழ் நோக்கி பயணிப்பதையும் உணர்ந்திருக்கின்றார். மேலும், அந்த நிலைகளில், அவருக்கு அதீத வீரியத் தன்மை கிடைப்பதையும் உணர்கின்றார்.
- சித்தர் அவரின் கடைக்கண் பார்வை கூட, அவரது ஆன்மாவை இயக்கி இருக்கின்றது என்பதையும் நினைவு கூறுகின்றார்.
- ஒரு முறை, கடை நிலையில், அம்மனூரில், அவரது இல்லத்தில், சித்தர் அவரது உயிரின் ஒட்ட நிலையை, திரு, முரளி அவர்களுக்கு தந்து, அதை அனுபவிக்க வைக்கின்றார். உயிர் உடம்பை விட்டு, ஒளியை விட வேகமாய் செல்வதும், திரும்ப, ஏதோ ஓர் விஷயம், சித்தர் அவர்களது உயிரை, அதை விட இரு மடங்கு வேகத்துடன், திரும்ப உடலுக்குள் இறக்கும் போராட்டத்தையும், சுமார் மூன்று நிமிடங்கள் கண்களை மூடி அருகில் அமர்ந்து உணர்ந்திருக்கின்றார். அதைப்பற்றி சித்தரிடம் விசாரிக்க, அது தான் அவரது அன்றைய நிலை என்று சிரித்துக் கொண்டே பதில் சொல்கின்றார். அன்று, திரு. முரளி அவர்கள், பிரம்ம வாசல் திறந்தவர்களுக்கு, கடை நிலையில், உயிர் (இங்கு வாசி) பிரிய முயற்சிக்கும் நிலையும், அது திரும்ப கூட்டினுள் தள்ளப்படும் நிலையையும் உணர்கின்றார்.
- அதே நேரத்தில், யாகம் முடிந்த ஒரு வாரத்தில், அவரது இல்லத்தில், ஓர் உயிர் பிரியும் என்பதையும் சித்தர் முன்கூட்டியே சொல்லுகின்றார். அவர், அவரைப்பற்றி தான் சொல்லுகின்றார் என்பதை அந்த நேரத்தில் திரு. முரளி அவர்களால் யூகிக்க முடியவில்லை.
- ஒரு முறை, சித்தர் ஹோமத்தை முடித்து விட்டு, சிலரோடு பேசிக் கொண்டிருந்த போது, கவனம் சிதற விட்டோரை சாடுகின்றார். அது திரு. முரளி அவர்களுக்கு, சபையில் பேசும் பொருளோடு ஐக்கியமாகி, அருகில் இருப்போரிடம் பேசாமல், கூர்ந்து கவனிக்க வேண்டும்; ஒரு புள்ளியில் கவனம் முழுக்க இருக்க வேண்டும் எனும் பாடத்தை, ஆழ்மனதில் பதிய வைத்து விடுகின்றது. இது அவரது வாழ்வியலுக்கும் சிறந்த ஓர் பாடமாகவும் எடுத்துக் கொள்கின்றார்.
குறிப்பு: நேர்காணல் பதிவு செய்து தொகுத்து வழங்குபவர் ரோஸாரியோ ஜோஸப் (ரோஸ்). இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக என்னை தொடர்புக் கொள்ளவும். மேலும் இந்த நேர்காணலுக்கான ஒலி நாடா என்னிடம் தான் உள்ளது. கேட்க விரும்புவோர் என்னை நேரில் சந்திக்கும் போது, தக்க காரணம் சொல்லி, கேட்டு பயன் பெறலாம். நன்றி.