சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (4): திரு. முருகன். பா அவர்களின் இறை அனுபவங்கள்.
நாட்கள்: பங்குனி 4, 2017 வெள்ளிக்கிழமை [03/17/2017 ] மாலை 3.52 முதல் 4:10 வரை [3:52 PM to 4:10 PM]
இணைப்பு: நேர்காணல் ஒலி நாடா [Audio of the interview]
குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:
இணைப்பு: நேர்காணல் ஒலி நாடா [Audio of the interview]
குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:
- திரு. முருகன் அவர்கள், திருமணத்திற்கு முன்னரே, அமெரிக்காவில் இருந்து வந்த பின், சித்தர் அய்யா பிள்ளையை சில அன்பர்கள் மூலம், ஹோம காரியங்களுக்காக, நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டுகின்றது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், திரு. முருகன் அவர்களுக்கு பிராமணர்கள் எழுப்பும் யாகத்தில் உடன்பாடு இருந்தது இல்லை. இருப்பினும் சித்தர் அத்தகையவர் இல்லை என்று அறிந்து, அவரை சந்திக்க மனம் உவந்து முன்வருகின்றார். அதற்கேற்ப அவரை நேரில் சந்தித்ததும், அவர் மேல் நம்பிக்கையும், பிரியமும் ஏற்படுகின்றது.
- அதன் பின், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அதுவும், குறிப்பாக, வெளிநாடு சென்று திரும்பி வந்த போதெல்லாம், சித்தர் அய்யா பிள்ளையை நேரில் சந்தித்து வருகின்றார்—சென்னையிலும், நாகவிளாகத்திலும். மெதுவாக அவர் நடத்திய ஹோமத்திலும் பங்கேற்று, அங்கு நடக்கும் நல்ல விஷயங்களிலும், சித்தர் தம் சமநோக்கு நிலையையும் கண்டு பெருமிதம் கொள்கின்றார். இதை குறிப்பிட காரணம், சித்தர்கள், ஒருவருக்கு ஒரு விஷயத்தில் உடன்பாடு இல்லையெனினும், அதன் மூலமாகவே, அதன் நன்மைகளை அனுபவமாக கொடுத்து, எவ்வாறு அவர்களை ஆட்கொள்கின்றனர் என்பதற்கு சான்று.
- திரு. முருகன் அவர்களக்கு, சித்தர் அய்யா பிள்ளை, ஓர் தந்தையைப் போல் நல்லது, கெட்டது விலக்கி, அவரது வேலை முதற் கொண்டு, அவரின் அனைத்து குடும்ப நிகழ்வுகளையும் ஆலோசனை செய்து, வழி நடத்தி வருகின்றார். இவரது விஷயத்தில், வாழ்வியலிலும், சிறந்த ஓர் வழிகாட்டியாக விளங்குகின்றார்.
- அதேபோல், அவரது அறிவுரை படி நடக்கு, வேலைக்காக, வெறும் ரூபாய் பத்தாயிரத்துடன், 2006ல் ஆஸ்திரேலியா சென்றவருக்கு, அங்கே குடி உரிமை கிடைத்து, சொன்ன படி மூன்றே மாதங்களில், சொந்தமாக உணவகம் திறந்து, வியாபாரம் நடத்தும் அளவிற்கு, நல்ல, ஏதுவான சூழல் உருவாகுகின்றது. இது திரு. முருகன் அவர்கள், சித்தர் மேல் வைத்திருந்த நம்பிக்கைகும், கீழ்ப்படிதலுக்கும் (ஏதுவான சூழலை உருவாக்க) ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.
- சித்தரின் வாக்கின் படி, சொன்னது போல், மூன்று மாதங்களில், ஆஸ்திரேலியாவில், வியாட்நாம் நன்பர் ஒருவர் தனது உணவகத்தை நடத்த முடியவில்லை என்றும், அந்த பொறுப்பை திரு. முருகன் அவர்களுக்கு கொடுத்து, நீ வாடகை மட்டும் தந்தால் போதும் எனக்கு எதுவும் தேவையில்லை என்று ஒப்படைத்து விட்டு, அந்நேரத்தில் பணம் ஏதும் இல்லாத திரு. முருகனிடம், ஆயிரம் டாலர் தந்து, தேவையான மளிகை பொருட்களையும் வாங்கி கொடுத்து விட்டு, வேலையை ஆரம்பிக்குமாறு சொன்னதை நினைவுகூர்ந்து, சித்தரின் வல்லமையை உணர்ந்து அகமகிழ்கின்றார். ஆறு மாதங்களில், திரு. முருகன் அவர்கள், அந்த கடையை, விலைக்கு வாங்கி, சொந்த கடையாக்கி கொள்கின்றார். முன்னரே, சித்தர் சொன்ன மாதிரி, சொந்த வீடும் ஆஸ்திரேலியாவில் வாங்குகின்றார்.
- ஒரு யாகத்தின் போது, சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன், (இந்த குறிப்பு எழுதிய காலத்திலிருந்து) அனைவரும் யாகம் முடிந்து, உத்தரவு வாங்கி செல்லும் போது, திரு. முருகன் அவர்களை இன்னும் ஒரு நாள் இருந்து விட்டு செல்லுமாறு உத்திரவு தருகின்றார். அதன்படி அவர்களும் தங்க, மேலும் சில அன்பர்களுடன் (திரு. ஆறுமுகன் அவர்கள் கூட இருக்க) வேளாங்கண்ணி சென்று வருமாறு உத்திரவு இடுகின்றார். அங்கு சென்றிருந்த போது, மீன் இறைச்சி உண்ண விரும்புகின்றனர். அதன் படி அவர்களும் உண்டு, சித்தர் அவர்களுக்கும், வஞ்சரம் மீன் வாங்கி வருகின்றனர். என்றும் மீன் விரும்பி சாப்பிடுபவர், அவர்கள் சென்ற நேரம் யோக நிஷ்டை ஆட்கொள்ள அன்று அவருக்காக வாங்கி வந்த மீன் இறைச்சியை உண்ணவில்லை. எனவே அதை வீண் செய்யாமல், அவர்களே உண்ணும் பொருட்டு, இரவு இரண்டிலிருந்து மூன்று மணி அளவில், ஐவர் சேர்ந்து, பாலத்தின் மேல் (நாகவிளாகம்), கீழே சலசலவென ஆறு ஓட, சற்று தியானம் செய்து விட்டு உண்ணலாம் என்று அமரும் போதே, அனைவருக்கும் எங்கிருந்தோ “ஓம்” என்ற பிரணவ சப்தம் கேட்கின்றது. அதை கேட்ட நிமிடம், திரு. முருகன் அவர்களுக்கு மெய் சிலிர்க்கின்றது. பின் கொண்டு வந்த மீன் இறைச்சியை, அங்கிருந்த அனைவருக்கும் பிரித்து தருமாறு, திரு. ஆறுமுகன் அவர்களிடம் தருகின்றனர். ‘சரவணபவ’ என ஆறு பேர் இருக்க, இங்கு ஜவர் மட்டும் தானே இருக்கின்றோம், என்று திரு ஆறுமுகன் அவர்கள் சற்று தாமதிக்க, நள்ளிரவு நேரத்தில், அங்கு ஒர் பைரவர் அவர்களை தேடி வருகின்றது. அதன் பின்னரே, அவரும், ஆழ்ந்த நிலை சென்று, அதே நிலையில், அதை அனைவருக்கும் பிரித்து கொடுக்கின்றார். பைரவர் உடன்; ஐவரோடு, ஆறு பேராக, இயற்கைக்கும், ஆன்மாவிற்கும், படைத்த (சிவா அர்ப்பணம் செய்த பின்) மீன் இறைச்சியை உண்டு மகிழ்கின்றனர். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், திரு. ஆறுமுருகன் அவர்கள் எதார்த்தமாக மீன் இறைச்சியை உடைத்த தர, சதை பகுதி மனிதர்களுக்கும், எலும்பு பகுதி பைரவருக்கு கிடைக்கின்றது.
- ஒரு யாகத்தின் போது, இரவு சயனத்தில், என்ன என்ன காட்சி கண்டனர் என்று வினவ, திரு. முருகனின் மனைவி அவர்களுக்கு, சித்தர் அய்யா பிள்ளை கிணற்றில் தவம் இருப்பது போல் காட்சி தந்ததையும், அதை அனைவரும் ஆச்சிரியத்துடன் கேட்டதையும், தனக்கு அதன் விளக்கம் தெரியவில்லை என்பதையும் நினைவு கூறுகின்றார்.
- வேலை நிமித்தமாக, சில வருடங்களாக, புறத்தில் சித்தர் அய்யா பிள்ளையை விட்டு திரு. முருகன் அவர்கள் விலகி இருக்க, தனது உடல் பிரியும் ஒரு வாரத்திற்கு முன், தன்னை வந்து பார்க்குமாறும், அந்த ஹோமத்தில் கலந்துக் கொள்ளுமாறும் உத்திரவிடுகின்றார். அதேபோல், திரு. முருகன் அவர்களும், அதற்கேற்றாற் போல வர, சித்தர் அவர்களது கடைசி ஹோமத்திலும், இறுதி சடங்கிலும், கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப் பெறுகின்றார்.
- சித்தர் அவர்கள் உடம்போடு இருந்த போதே, திரு. முருகன், அவர்களது மனைவி தம் கனவுகளில் சில குறிப்புகள் தந்து சென்றதையும் நினைவு கூறுகின்றார்.
குறிப்பு: நேர்காணல் பதிவு செய்து தொகுத்து வழங்குபவர் ரோஸாரியோ ஜோஸப் (ரோஸ்). இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக என்னை தொடர்புக் கொள்ளவும். மேலும் இந்த நேர்காணலுக்கான ஒலி நாடா என்னிடம் தான் உள்ளது. கேட்க விரும்புவோர் என்னை நேரில் சந்திக்கும் போது, தக்க காரணம் சொல்லி, கேட்டு பயன் பெறலாம். நன்றி.
No comments:
Post a Comment