சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (1): திரு ஆறுமுகன் ப அவர்களின் இறை அனுபவங்கள்.
ஆறுமுகன் ப [Arumughan P] |
நேர்காணல் விவரம்:
பெயர்: ஆறுமுகன் ப [Arumughan P]
இடம் #1: திருவான்மியூர் கடற்கரை [Thiruvanmiyur Beach]
இடம் #2: நடேசன் பார்க், தி. நகர், சென்னை.
நாட்கள்:
- மாசி 18 2017 வியாழக்கிழமை [03/02/2017 Thursday] காலை 7.11 முதல் 8:03 வரை [7.11 AM to 8:03 AM]
- பங்குனி 4, 2017 வெள்ளிக்கிழமை [03/17/2017 ] மாலை 3.36 முதல் 4:32 வரை [3:36 PM to 4:32 PM]
குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:
- கந்த சஷ்டி படித்த வந்த ஏழாம் நாள், ஒரு வியாழக்கிழமை அன்று வெளிப்பாடு. சுயம்பாக. தொண்டையை கிழித்து கொண்டு எழும்புவது போல் ஒரு சப்தம். பாம்பை போல் பின்னோக்கி ஊர்ந்து செல்லும் யோக நிலை. அதனுடன் கூடிய சமாதி நிலை. வாலை பேசுதல்.
- சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில், இராமர், லக்குவன், சீதை, அனுமர், ஷிர்டி சாய் பாபா, புட்டபர்த்தி சாய் போன்றோரின் காட்சிகளை ஆழ்நிலை தியானத்தில் அனுபவித்தல்.
- சித்தர் அய்யா பிள்ளை மூலம் கிட்டியவை:
- முதல் சந்திப்பில் பரவச நிலையடைந்து, சித்தாடல். வாலை பேசுதல்.
- மெய்மறந்த நிலையில் கிடப்பவரை விழிக்கச் செய்தல்.
- பிரம்மத்தின் மேல் நீர் வார்த்து இரைக்கும் போது அதில் காந்த சக்தியை உணர்தல். மேலும் அவர் நாபியில் கை வைக்கும் போது சக்கர சுழற்சியை அனுபவித்தல். ஏகாந்த நிலை அடைதல்.
- பிறரை எதார்த்த நிலையில், மெய்மறந்த நிலையில் இருந்தாலும், ஆட்கொண்டு தன் வசப்படுத்துதல். பரிபூரண சரணாகதி தத்துவதை உணர்தல்.
- ஜீவ காந்த சக்தி மூலம் வலியை நிவர்த்தி செய்தல். ஒரு ஆன்மாவை துன்புறுத்தி வந்த தீய சக்தியை விரட்டுதல்.
- தனது ஜீவ காந்த சக்தி மூலம் ஒருவருக்கு பல வருடங்களாக இருந்த வந்த கழுத்து வலியை குணமாக்குதல். அந்த நிலையில் அதிலிருந்து வலிந்து வந்த சக்தி, தன் மேலும் பாயும் போது, அதை நன்கு உணர்ந்து, அனுபவித்து ஏகாந்த நிலையடைதல்.
- கருத்தரித்த நிலையை முன்னதே கூறல். அந்த வித்தின் பூர்வீகத்தை பற்றி மொழிதல்.
- ஒரு ஹோமத்தின் போது, இயற்கையை தன் வசப்படுத்தி, மழையை நிறுத்த செய்தல்.
- 2008ல், சித்தர் அய்யா பிள்ளை, சிதம்பரம் நடராஜர் கோவில் குளத்தில் அனைவரையும் (நாற்பதுக்கு மேற்பட்டோர்), பிரம்மத்தில் நீரை வார்த்து நீராட்டிய சம்பவத்தில், உச்சி காலத்தில், திரு. ஆறுமுகன் அவர்கள் சூரியனை நோக்க, சூரியன் சந்திரனாக, அதுவும் அழகான முழுமதி நிலவாக அவருக்கு தெரிகின்றது, மேலும் சூரியனின் வெப்ப காற்றும் அவர் மேல் படும் போது குளிர்ந்த காற்றாக மாறுகின்றது. ஒரே இயற்கை தன்னிடம் வேறு பரிமாணத்தில் தொடர்பு கொள்ளும் நிலையை எண்ணி வியப்படைகின்றார். ஆத்திகத்தில் உள்ளோருக்கு இந்த அற்புதமான நிலையதன் ஆழத்தை நன்கு உணர்வர். பின்னர் அதே நிலையில், அங்கிருந்தவாறு, அந்த பக்கம் இருந்தோரை நோக்க, அதில் சித்தர் அய்யா பிள்ளையின் முகமும், மேலும் அங்கிருந்த ஒர் பெண்ணின் முகமும், மட்டும் ஊதா நிறத்தில் தென்படுகின்றது. மற்றவர்களிடம் எந்த மாற்றமும் தென்படவில்லை.
குறிப்பு: நேர்காணல் பதிவு செய்து தொகுத்து வழங்குபவர் ரோஸாரியோ
ஜோஸப் (ரோஸ்). இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக என்னை தொடர்புக் கொள்ளவும்.
மேலும் இந்த நேர்காணலுக்கான ஒலி நாடா என்னிடம் தான் உள்ளது. கேட்க விரும்புவோர் என்னை நேரில்
சந்திக்கும் போது, தக்க காரணம் சொல்லி, கேட்டு பயன் பெறலாம். நன்றி.
No comments:
Post a Comment