சித்தர் அய்யா பிள்ளையிடம் கிட்டிய இறை அனுபவங்களின் தொகுப்பு (2): திரு. கடற்கரையாண்டி. நா (Late) குடும்பத்தினர் அவர்களின் இறை அனுபவங்கள்.
![]() |
கடற்கரையாண்டி. நா (Late) [Kadarkaraiyandi N (Late)] |
நேர்காணல் விவரம்:
இடம்: திரு. கடற்கரையாண்டி (Late) அவர்களின் மனைவி திருமதி. வீரலஷ்மி கடற்கரையாண்டி அவர்களின் இல்லம். பம்மல்.
நாட்கள்:
- மாசி 18 2017 வியாழக்கிழமை [03/02/2017 Thursday] காலை 9.18 முதல் 9:53 வரை [9.18 AM to 9:53 AM]
- மாசி 18 2017 வியாழக்கிழமை [03/02/2017 Thursday] காலை 10.10 முதல் 10:20 வரை [10.10 AM to 10:20 AM]
- மாசி 19 2017 வெள்ளிக்கிழமை [03/03/2017 Thursday] காலை 9.19 முதல் 9:33 வரை [9.19 AM to 9:33 AM]
- மாசி 19 2017 வெள்ளிக்கிழமை [03/03/2017 Thursday] காலை 7.56 முதல் 8:56 வரை [7.56 AM to 8:56 AM]
- மாசி 20 2017 சனிக்கிழமை [03/04/2017 Thursday] காலை 9.30 முதல் 9:37 வரை [9.30 AM to 9:37 AM]
குறிப்பிட தக்க ஆத்ம அனுபவங்கள்:
- திரு. கடற்கரையாண்டி அவர்களின் மூத்த மகன் திரு. சிதம்பரகுமார் அவர்கள், சித்தர் அய்யா பிள்ளையை சந்திக்கும் முன், பல துன்பங்களினால், வாழவே பிடிக்காத நிலையில், வறுமையில் உழன்று வந்தார். கோயில் குளம் என்று, அங்கும் இங்கும், அலைந்தும் திரிந்தும், அவ்வப்பொழுது கிடைக்கும் ஆறுதலில், மனதை தேற்றி வாழ்ந்து வந்தாலும், அவருக்கு முழுமையான மனநிறைவு கிடைக்கவில்லை. அத்தருணத்தில், அவர்கள் குடும்பத்தினருக்கு, திரு. கடற்கரையாண்டி அவர்களின் இரண்டாவது மகன் (கடைசி) திரு. தெய்வசூடாமணி அவர்களின் மூலமாக சித்தர் அய்யா பிள்ளையை, மற்றும் ஓர் அன்பர் வீட்டில், நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அந்த சந்திப்பின் போது, அவரிடம் சித்தர் கேட்டது, “நான் என்ன மாலையா போட்டிருக்கேன், கொட்டையா போட்டிருக்கேன், என்னடா தேடி வந்த?”
- சித்தர்கள், மகான்கள், போன்று எதுவும் அறியாத காலக்கட்டத்தில், திரு. சிதம்பரகுமார் அவர்களுக்கு, அதுவும் அவரது மூத்த மகன் திரு. சிவ ஜெயக்குமார் பிறந்த பின்னரே, சித்தர் அய்யா பிள்ளையின் நேரடி தொடர்பு கிட்டுகின்றது. முதல் சந்திப்பில் அங்கு சபையில் இருந்த அனைவரின் முன்னிலையிலும், “இவன் எனக்காக எதையும் செய்வான்” என்று திருவாய் மொழிந்தார். அந்த வாக்கின்படி அவரையும் சித்தர் பிற்காலத்தில் வெகுவாய் ஆட்கொண்டு அந்த நிலைக்கு அழைத்து சென்றார். அவரை அதை உணரவும் வைக்கின்றார்.
- சித்தர் அய்யா பிள்ளை, திரு. கடற்கரையாண்டி அவர்களுடன் நெருக்கமாக பழகி வந்தார். ஒருமுறை அவர்களின் குலதெய்வமான சிதம்பரத்தாண்டவர், சித்தர் மேல் இறங்கி, திரு. கடற்கரையாண்டி அவர்கள் செய்த தவறுகளை சுட்டிக் காட்டி, அவரும் அதை ஏற்றுக் கொண்டு, தன்னை திருத்திக் கொள்ளும் வண்ணம் அனுகூலமான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கின்றார். அவர்களது குலதெய்வம் இறங்கி பேசியது அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
- அதே நாள், திரு. சிதம்பரகுமார், அவர்களது காலமான சித்தப்பா பற்றி வினவ, அவர்களின் ஆன்மாவும், சித்தர் மேல் இறங்கி, தான் பட்ட இன்னல்களை எல்லாம் சித்தர் குடிகொண்ட உடம்பின் மூலம் அனுபவமாக தர, அவர் தம் கடைசிக்காலத்தில் பட்ட துன்பத்தை (கை கால்கள் பின்னி மிக்க துயருற்ற நிலையை) அங்கிருந்த அனைவரும் கண்கூடாக காணும் வண்ணம் வாங்கி அனுபவித்தார். இவ்வாறு தான் அவர் இறந்தார். இவ்வாறு தான் அவர் உயிருடன் கொல்லாமல் கொல்லப்பட்டார் என்பதை வெளிப்படையாக உணர்த்தினார்.
- நாகவிளாகத்தில் நடந்த ஓர் ஹோமத்தின் போது, இரவு சத்சங்கத்தில், அனைவருக்கும் விபூதி பூச, திரு. சிதம்பரகுமார் அவர்கள் மேல் பூசும் போது, நெற்றியில் கைவைக்க, ஒருவித ஈர்ப்பு சக்தியால் சித்தர் ஆட்கொள்ளப்பட்டு, கைகள் நெற்றியில் ஒட்டியவாறு சில தருணங்கள் செல்ல, திரு. சிதம்பரகுமார் சித்தரின் முகத்தை பார்க்க, சித்தர் ஓர் புலியாக அவருக்கு காட்சித் தந்தருளினார்.
- திரு. சிதம்பரகுமார் அவர்களின் உள்ளார்ந்த விருப்பத்திற்கு ஏற்ப, ஒரு சில மாதங்களிலேயே, சித்தர் அய்யா பிள்ளை அவருடன் நெருங்கி பழகும் தருணங்களை கிடைத்தருளச் செய்கின்றார். அந்த ஈர்ப்பு, அவர் ஒரு சித்தர் என்பதால் வாராமல், முதற் காதல் போல், காரணமில்லாமல் வெகுவாய் ஈர்க்கப்பட்டு ஆட்கொள்ளப்படுகின்றார்.
- சித்தருடன், திரு. சிதம்பரகுமார் சென்ற முதல் யாத்திரா பயணம் ஷீர்டி. அங்கு பாபாவின் சமாதியின் மேல், மூன்று முறை ஒளி பளிச் பளிச்சென்று மின்னியதை அனைவரும் கண்டு அகமகிழ்ந்தனர்.
- ராகவேந்திரர் சமாதி, துங்கபத்தராவில் முதல் முறை திரு. சிதம்பரகுமார் அவர்களுக்கு பிரம்மத்தில் நீரை வாரி இறைத்தல். அந்நிலையில் பிரம்மம் செவ்வானமாய், பிரகாசமாய் (நெருப்பாய்) அவருக்கு தெரிகின்றது. தனக்குள் உள்ள பேராற்றலை உணர்தல். கால்களை மடக்கி முட்டிப் போட முடியாத அளவிற்கு அது அவரை இருக்கி மேல் எழுப்புகின்ற நிலை. வாசி மேல் எழும்புகின்ற நிலை.
- தலைக்காவிரி, காசி, கயா போன்ற யாத்திரா பயணங்களில் அவருடன் சென்று வருதல். பல வித வழிபாடு முறைகள், சத்சங்கங்கள், என அனைத்திலும் பங்கு கொள்தல்.
- கயாவில், பித்ரு பூஜைக்காக வாங்கும் பொருட்கள் திரும்ப வாங்கிய கடைக்கே போவதை பார்த்து, சித்தர் சாடுதல். விலைக்கு அவற்றை கேட்டாலும் தர மறுப்பது.
- திருவேணி சங்கமத்தில் மூன்று நதிகள் (கங்கா, யமுனா, சரஸ்வதி) சங்கமிக்கும் இடத்தில் நீர் எடுக்கு உத்திரவு இடுகின்றார். ஆற்றினுள் நான்கு பேர் அந்த இடத்தை தேடிச் செல்ல, ஒரு இடத்திற்கு மேல் அவர்களால் போக முடியாத அளவிற்கு அழுத்தம் ஏற்பட, சித்தர் கரையில் இருந்தவாறு அது தான் சங்கமம் என்று குறிப்பிடுதல்.
- திரு. சிதம்பரகுமார் அவர்களின் சிறு சிறு ஏக்கங்கள், மனதில் தோன்ற, சின்ன சின்ன தடைகளும், குருவருளால் நீக்கப்பட்டு ஆசைகள் நிறைவேறுவது. அவரையே குருவாக ஏற்றுக் கொண்ட பின், பக்தி மார்க்கத்தில் இருந்து மெல் மெல்ல விலகி அருவமாக வழிபட ஆரம்பிக்கின்றார். அதேபோல் ஜோதிடம் பார்த்தல், குறி கேட்டல், மற்ற குருமார்களை சந்தித்தல் போன்ற அனைத்தையும் தவிர்த்தல்.
- சபரி மலை அய்யப்பன் விக்ரஹம் அவருக்கு சித்தர் அய்யா பிள்ளையாக காட்சியளித்தல். அந்த தரிசனத்தால் அவர் மனம் பரவசமடைதல்.
- சித்தர் அய்யா பிள்ளையுடன் பழகிய காலகட்டங்களில் அவரின் எளிமை, அரும்பெரும் சக்தி தன்வசம் கொண்டும், அனைவருடன் சக மனிதராய் பழகும் எதார்த்த நிலை, தான் முதலில் அதை உண்டு, அது விஷமா என்று பார்த்த பின் அனைவருக்கும் பரிமாறும் நற்குணம், இவையனைத்தும் அவரை, உண்மையான, கிடைப்பதற்கு அரிய, ஓர் குருவாக, மனம் பரிபூரணமாக திரு. சிதம்பரகுமாரை ஏற்றுக் கொள்ள வைக்கின்றது.
- மகாபலிபுரத்தில்* ஓர் அவமானம் அவருக்கு கொடுக்கப்பட்ட பொழுது, அந்த கோபத்தை தன்னுள் அடக்கி, திரு. சிதம்பரகுமாரை அழைத்துக் கொண்டு, வேக வேகமாய், அதீத வேகத்தில், உடல் தெறிக்கும் வண்ணம், மலையை சுற்றி வந்து, ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து, அரை மணி நேரம் கழித்து, சாந்தம் அடைந்த பின், தனது மன வேதனையை அவருடன் பகிர்ந்து கொண்டு, ஒரு பாட்டில் தண்ணீரை அவரிடம் கேட்டு வாங்கி பெற்றுக் கொள்தல்.
- ஒவ்வொரு முறையும், திரு. கடற்கரையாண்டி அவர்களின் இருப்பிடத்திற்கு வந்து, ஒரிரு நாட்கள் தங்கி செல்லும் போதெல்லாம், அந்த குடும்பமே மகிழ்ச்சியில் ததும்பும்.
- சித்தர் வரும் முன் இருந்த நிலை நீடித்திருந்தால், அவர் குடும்பமே நிர்மூலமாகியிருக்கும் என்றும், இந்த குடும்பம் இன்றளவும் ஜீவித்து இருப்பதற்கு அவரே காரணம் என்றும் நினைவு கூறுதல். அவர் பரிபூரண சரணாகதி நிலையடைந்ததையும், வேறொருவர் அவருக்கு அதை சொல்ல அதையும் அவர் நினைவு கூறுதல்.
- திரு. சிதம்பரகுமார் அவர்களின் இரண்டாவது மகன், சிறு வயதில் தலையில் அடிப்பட்டு, கால் கை இயங்காமல் மூச்சுப்பேச்சற்று கிடந்த போது, சித்தர் அய்யா பிள்ளையை அலைபேசி மூலம் தொடர்பு கொள்கின்றார். தலையில் பனி மேகம் போல் படர்ந்து இருக்கின்றது என்று முன்னதே கூறி, அதை சரி செய்து விடலாம் என்று, உடனடியாக ஹாஸ்பத்திரி அழைத்து செல்லுமாறு உத்திரவிடுகின்றார். அதன்படி, அந்த குழந்தையும், சிகிச்சைக்கு பின், முழு குணமடைந்து சித்தருடன் நெருங்கி, ஓர் இனம் புரியாத அன்புடன் பழகி வந்தது.
- பிற கோயில்கள் சென்றாலும், திரு. சிதம்பரகுமார் அவர்கள் அங்கு இருக்கும் தெய்வங்களை சித்தர் அய்யா பிள்ளையாகவே காண்கின்றார். அவ்வாறே வழிபடுகின்றார்.
- அவருக்கு ஒரு முறை நாகவிளாகம் தாள (?) விருச்சம் அருகில் ஆற்றல் வெளிப்படுகின்றது. அருகில் இருந்த அன்பர் நாபியில் தனது பிரம்மத்தை வைத்து முட்டி, அரவம் போல், அந்த சக்தியை வெளியே தள்ளும் யோக நிலை வசப்படுதல்.
- அதேபோல் சித்தர் அய்யா பிள்ளை ஒருமுறை விழித்துக் கொண்டு படுத்திருந்த போது, கால்களை அமுத்தி விட்டப் போது, எதிரில் இருந்தவர் உடம்பில் இரண்டு ஜோதியை காணுதல்.
- கர்நாடகா சாமுண்டீஸ்வரி கோவிலை விட்டு வெளியே வர திரு. சிதம்பரகுமார் அவர்களுக்கு, பின்னங்கழுத்தில் உள்ள கட்டி உயிர் போகின்ற வலியை ஏற்படுத்துகின்றது. அதை வருடி பார்த்து, சரியாகி விடும் என்று சொல்லி தடவி விட, அந்த கணமே, வலி அவரை விட்டு விலகுகின்றது. பின்னர் தலைக்காவிரியில் தண்ணீரை எடுத்து, அனைவரின் பிரம்மத்தில் ஊற்றி வர, திரு. சிதம்பரகுமாரை அழைத்து, பின்னங்கழுத்தில் உள்ள கட்டியின் மேல் தண்ணீரை ஊற்றுகின்றார். அந்த வலி, முழுவதுமாய் விலகி ஒரு வித சுகத்தை அவருக்கு அது தருகின்றது.
- கர்நாடகா டீ எஸ்டேட்டில் தங்கியிருந்த போது, இரவில், கீழ் தளத்தில் சித்தர் அய்யா பிள்ளை இருக்க, மேல் தளத்தில், மாடியில், வெட்டவெளியில், ஒரு சில அன்போர்களோடு சேர்ந்து திரு. சிதம்பரகுமார் பிரணவ சப்தம் கேட்டல். கீழ் சென்று பார்த்தால் சித்தர் அமைதியாக அமர்ந்திருக்கின்றார்.
- அன்று இரவு, ஒவ்வொருவரையும் அவரவர் ஆத்ம நிலைக்கேற்ப, தியான நிலைக்கும், யோக நிலைக்கும் சித்தர் தள்ள, திரு. சிதம்பரகுமார் அவர்களுக்கு ஈரப்பசையால் ஏற்படும் வாசம் கிடைக்கின்றது.
- திருமதி. வீரலஷ்மி கடற்கரையாண்டி அவர்கள் குடும்பம், பூர்வீகமான தூத்துக்குடியை விட்டு, வாழ்வாதாரம் தேடி, குழந்தைகளை கூட்டிக்கொண்டு சென்னை வருகின்றனர். ஓர் குடும்பம் சென்னையில் என்ன என்ன கஷ்டங்கள் பட முடியுமோ அவ்வளவு கஷ்டங்களும் பட்டு மீள முடியாத சூழ் நிலையில், முன்னரே கூறிய வண்ணம், அவர்களது இரண்டாவது மகன் (கடைசி) திரு. தெய்வசூடாமணி அவர்களின் மூலமாக சித்தர் அய்யா பிள்ளையை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது.
- முதல் முறை அவர்களை சந்திக்கும் போது, திருமதி. வீரலஷ்மி கடற்கரையாண்டி, தங்களது குடும்ப கஷ்டங்களை அவரிடம் முறையிட, அவரும் அதற்கு ஆறுதல் கூறி, அவர்களது இரண்டாவது மகனுக்கு திருமணம் முடியும் என்று வாக்குறுதியும் அளிக்கின்றார். சொந்த வீடு அமையும் என்றும் திருவாய் மொழிகின்றார். அதேபோல் அவர்களின் துன்பம் நீக்கி சொன்னவையெல்லாம் பல இன்னல்கள் தாண்டி சித்திக்கவும் செய்கின்றார்.
- ஒருமுறை யாத்திரையின் போது, திருச்செந்தூர், இருக்கன்குடி மாரியம்மன் கோவில், குலசேகரபட்டினம், என தரிசனம் செய்து விட்டு, தூத்துக்குடி உறவினர் வீட்டில் இரவு தங்குகின்றனர். அன்று இரவு, திரு. கடற்கரையாண்டி அவர்களின் ஆச்சி, சொல்ல பேச்சி, சித்தர் அய்யா பிள்ளையை ஆட்கொண்டு, அவர்கள் மூலம், தான் பட்ட அவமானங்களையும், இன்னல்களையும், கொடுங்துயர்களையும், குடும்ப விஷயங்களையும் பகிர்ந்து கொள்தல். பின் தீய விஷயங்களை இனங்காட்டி கொடுத்து அவைகளில் இருந்து விலக கட்டளையிடுதல். இரு வேலைகளை முடித்து விட்டு, அவர்கள் இல்லத்திற்கே வருவதாகவும் அருள் பாலித்தல். அந்த நிகழ்வு அனைவரையும் மகிழ்வுற செய்தது. அன்று முதல் மூதாதையர் வழிபாட்டை, திரு. கடற்கரையாண்டி குடுமபத்தினர், சொல்ல பேச்சி ஆச்சிக்கு விளக்கு போட்டு, முறையாக செய்து வருகின்றனர்.
- ஒருமுறை சொல்ல பேச்சி ஆச்சி உத்தரவு மீறி, குடும்பத்தினர் ஓர் இடத்திற்கு சென்ற போது, அவர்களின் பேரன்மார், குழந்தைகள் இருவரும், வயிற்று போக்கால் அவதியுற்றனர், மூன்று(?) நாட்கள் கழிந்த நிலையில், அவர்கள் எதிர்பாராத வண்ணம், சித்தர் அய்யா பிள்ளை மூலமாக, சொல்ல பேச்சி ஆச்சி தொடர்பு கொண்டு, விவரம் தெரிவித்து, அவர்கள் சொன்னபடி தேனை நாக்கில் வைக்க, வயிற்று போக்கும் நிற்கின்றது.
- ஒரு முறை வெளிநாடு செல்லும் முன், கையில் வீக்கம் இருப்பதை திருமதி. வீரலஷ்மி கடற்கரையாண்டி தெரிவிக்க, சித்தர் அய்யா பிள்ளை அதை நீவி விட, அந்த வீக்கம் சித்தர் கைகளுக்கு மாறுகின்றது.
- திரு. கடற்கரையாண்டி உடல் உபாதைகளுக்கு, அவர் மேல் வரும் சக்திகளை வைத்தே நிவாரணம் கூறுதல்.
- பெண்கள் வீடு தூரமாக இருக்கும் போது அருகில் வராமால் இருப்பதை சாடுதல். உயிருக்கும், இயற்கைக்கும், தீட்டு இல்லை என்று சித்தர் மரபை பறைசாற்றுதல்.
- வீட்டில் பிறந்த மூன்று பேரன்களும் ஆண்களாய் இருக்க, அவர்கள் பெண் குழந்தைக்காக மன்றாட, அதுவும் சித்திக்கின்றது.
- ஒரு முறை திரு. கடற்கரையாண்டி அவரின் குளிர் காய்ச்சலை தன் மேல் எடுத்துக் கொண்டு நடுங்கி தவித்தல்.
- திரு. தெய்வசூடாமணியின் முதல் கரு வித்து, இயற்கையாய் கலைந்து போக, திருவான்மியூர் சித்தர் சக்கரத்தமாள் கோயிலுக்கு சென்று, அங்கு அரை மணி நேரம் தங்கி, மூன்று மாதுளம் பழம் வாங்கி, இரண்டை அங்கு கொடுத்து விட்டு, ஒன்றை உடைத்து வீட்டிற்கு எடுத்து சென்று, அதை இனிப்புடன் உண்டு மகிழ்வுற்று இருக்க கட்டளையிடுகின்றார். அதன்படி செய்ய அவர்களக்கு நல்ல ஓர் ஆண் மகசு கிடைக்கின்றது.
- ஒரு முறை திரு. கடற்கரையாண்டி பேத்தி, இரண்டு வயதாய் இருக்கும் போது, சித்தர் அய்யா பிள்ளையின் பிரம்மத்தில், நீர் ஊற்றி மிருதுவாய் வருடி விட, அவர் ஏகாந்த நிலையடைந்து, அதே நிலையில் அப்படியே அமர்ந்து விடலாம் என்று மனம் உவந்து பாராட்டுகின்றார்.
- அதே குழந்தை சிறு வயதில் நடக்க சிரம பட்ட போது, இரண்டு காலையும் நன்கு நீவி விட்டு, நடக்க ஆசிர்வதித்தல்.
- திரு. தெய்வசூடாமணியிடம், சித்தர் அய்யா பிள்ளை, தான் இந்த பூத உடலுடன் இருக்கும் போது நிறைய காரியங்கள் செய்ய முடியவில்லை என்றும், உடம்பை விட்ட பின் செய்ய முடியும் என்று பகிர்ந்து கொள்கின்றார்.
- அவர்களுக்குள் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்தல். அதுவும் குறிப்பாக, அவருக்கு, என்று ஆத்திகத்தில் வர விருப்பம் இருக்கின்றதோ, அன்று தான், அதில் நானே நுழைவேன் என்று ஆத்மார்த்தமான ஒப்பந்தம் போட்டு கொள்தல், என அவரிடமிருந்த சுதந்திரமான எதார்த்தமான உறவை வெளிப்படுத்துகின்றார்.
- தான் சமாதியாக போவதை முன்னதே கூறல். மேலும் அது சம்ந்தப்பட்ட, சில காரணத்தையும் பகிர்ந்து கொள்தல்.
- சித்தர் அய்யா பிள்ளை தான் தன் குரு என்று மனம் உவந்து கூறல். அனுபவ ரீதியாக அனைத்து ரூபத்திலும் அவரை உணர்வதை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பு: நேர்காணல் பதிவு செய்து தொகுத்து வழங்குபவர் ரோஸாரியோ ஜோஸப் (ரோஸ்). இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக என்னை தொடர்புக் கொள்ளவும். மேலும் இந்த நேர்காணலுக்கான ஒலி நாடா என்னிடம் தான் உள்ளது. கேட்க விரும்புவோர் என்னை நேரில் சந்திக்கும் போது, தக்க காரணம் சொல்லி, கேட்டு பயன் பெறலாம். நன்றி.
No comments:
Post a Comment