அரியதோர்
நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்
ஆறிரண்டு
நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
சுரியதோர்
எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்
தோஷ
தோஷ பாவமாயை தூரதூர ஓடவே
கரியதோர்
முகத்தையுற்ற கற்பகத்தைக் கைதொழக்
கலைகள்
நூற்கண் ஞானமும் கருத்தில் வந்து திக்கவே
பெரியபேர்கள்
சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி
ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே.
—சித்தர் சிவவாக்கியர்
பாடல் (001)
The rare mantra ‘namachivayam’ became the source and
the self
Chanted those days by thousand and odd divine ones
Contemplating on that letter I will recite sivavakiyam
(the verses)
Let it chase away, evil, sinful deceptions that
hide beneath the solemn truth
When I pray to the dark face of the inner sanctum
Hundreds of arts and wisdom appear in my thought
All humankind, learnt, great and small
I will recite straight, forceful and hard, kindly
bear with me.
—Siddhar Sivavakkiyar Hymn (001)
No comments:
Post a Comment